சமீபத்தில் மத்திய அரசு சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
சிஏஏ என்ற குடியுரிமை சட்டம் மார்ச் 11ஆம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்
இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த சட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சுப்ரீம் போட்டியிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது
இந்த மனுக்களை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்க மனுதாரர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது
இந்த வழக்கு மார்ச் 19ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.