சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (13:47 IST)
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிதரூர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவின் விசாரணையை நீதிபதி நாளை ஒத்திவைத்துள்ளார்.  
 
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தற்போது திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். அவருடைய காதல் மனைவி சுனந்தா புஷ்கர். 
 
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசி தரூருடன் கருத்து வேறுபாடு இருந்த நிலையில் சுனந்தா உயிரிழந்ததால், இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
 
இந்த கொலை வழக்கின் ஆதாரங்களை வைத்து சசி தரூர் மீது டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். மேலும்,  டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் அவரை ஜூலை  7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இதனால் சசிதரூர், சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி நேற்று டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 
 
இந்த முன்ஜாமீன் மனு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை கையாளும் சிறப்பு விசாரணை குழு சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் நீதிபதி, முன்ஜாமீன் தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்