எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: மதுரை மத்திய சிறையில் அடைத்த போலீசார்

சனி, 17 ஜூன் 2023 (14:51 IST)
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நேற்றைய இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 15 நாட்கள் காவல் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறு கருத்துக்கு பதிவு செய்ததாக பாஜக மாநில செயலாளர் எஸ் ஜே சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் இன்று காலை எஸ்.ஜி. சூர்யா மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது எஸ்.ஜி. சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்ற காவல் என நீதிபதியை உற்றவிட்டார். இதனை அடுத்து எஸ்.ஜி. சூர்யா மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
 
Edited by mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்