’இரும்பு பெட்டிக்குள் ’அடைத்து நதியில் இறக்கப்பட்ட ’மேஜிக் நிபுணர்’ மாயம் !

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (14:49 IST)
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா பகுதியில் வசிப்பவர் சாஞ்சல் லகிரி, இவர் பிரபல  மேஜிக் கலைஞராக உள்ளார். இவர் தன்னை மேஜிக் நிபுணர் மாண்ட்ர்ரெக் என அறிவித்து பல்வேறு சாகசங்களை செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்பட்டார். 
இந்நிலையில் மேற்கு வங்களத்தில் புகழ்பெற்ற ஹவுரா பாலத்தில் ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.
 
அதாவது லகிரி இரும்புக் கம்பிகளால் செய்யபட்ட பெட்டிக்குள் அடைத்து பாலத்துக்கு கீழே செல்லும் ஹூக்ளி நதியில் கிரேன் மூலம் இறக்கப்பட்டார். 
 
தான் இந்த பெட்டியைத் திறந்து, ஆற்றுக்கு மேலே வருவேன் என்று தெரிவித்தார்.இதுமாதிரி ஆபத்தான சாகசத்தை அவர் பலமுறை செய்திருந்தாலும் கூட  இந்த முறையும் திகிலாகவே பார்க்கப்பட்டது. 
 
ஹூக்ளி ஆற்றங்கரையில் இறக்கப்பட்ட பின்னர், நெடுநேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது ரசிகர்கள் மற்றும்  சக கலைஞர்களுக்குப் பெரும் அதிர்ச்சி  அடைந்தனர்.
 
இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது கொல்கத்தா போலீஸார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து சாம்ன்சல் கிரியை தேடி வருகின்றனர். ஒருவேளை அவர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்