சிஏஏ சட்டத்தை தடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை: அமித்ஷா

Mahendran
வியாழன், 14 மார்ச் 2024 (10:26 IST)
சமீபத்தில் மத்திய அரசு நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட சில மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறி இருந்தனர்.

 இந்த நிலையில் சிஏஏ சட்டத்தை தடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது சிஏஏ சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இது நமது நாட்டின் உரிமையை உறுதி செய்யும் என்றும் இதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்தார்

இந்த சட்டம் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் எனக் கூற மாநில அரசர்களுக்கு உரிமை இல்லை என்றும் சட்டத்தை ஏற்றுவதற்கும் அமல்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சட்டம் குறித்து தவறான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றார்கள் என்றும் தெரிவித்தார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்