சாலைகளில் வேகத்தடைபோல் காட்சியளிக்கும் 3D வரைபடங்கள்: மத்திய அமைச்சர் புதிய யோசனை

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (09:29 IST)
சாலைகளில் 3D வரைபடங்கள் அமைத்து போலியான வரைபடங்கள் மூலம் சாலை விபத்துக்களைத் தடுப்பது தொடர்பான யோசனையை மத்திய அமைச்சர் நிதின்  கட்கரி முன்வைத்துள்ளார்.


 

 

 
நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது 1.5 லட்சம் பேர் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.
 
இந்நிலையில், வெளிநாடுகளில் இருப்பதை போன்ற சாலைகளில்  முப்பரிமாண வேகத்தடுப்பு வரைபடங்களை வரைந்து விபத்துக்களை தடுக்கும் புதிய யோசனையை மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்வைத்துள்ளார்.
 
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய முப்பரிமான வரைபடங்கள் நடைமுறையில் உள்ளன.
 
அதேபோல, இந்தியாவிலும், இதை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற முப்பரிமாண ஸ்பீடு பிரேக்கர்களை சாலைகளில் வரைந்து வைத்தால், தேவையில்லாமல் வேகத்தடுப்புகளை அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
 
அத்துடன், வேகமாக செல்லும் வாகனங்கள் தூரத்தில் வரும்போது இந்த வரைபடத்தை பார்க்கும் போது அது ஸ்பீடு பிரேக்கர் என்று நினைத்து வாகனங்களின் வேகத்தைக் குறைப்பார்கள்.
 
இதனால், விபத்துகளின் எண்ணிக்கை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்