ஆளுநர் உத்தரவை நிராகரித்த சபாநாயகர்!!

திங்கள், 10 ஜூலை 2017 (20:10 IST)
விதிமுறைகளை மீறி மத்திய அரசு தன்னிச்சையாக 3 நியமன எம்.எல்.ஏ-க்களை அளுநர் கிரண் பேடி பதவி பிராமணம் செய்து வைத்தார். இந்த நியமனத்தை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.


 
 
புதுச்சேரியில் பாஜக-வைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ-க்களாக ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
 
மத்திய அரசே தன்னிச்சையாக 3 பேரை நியமனம் செய்ததற்கு புதுவை அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் போராட்டங்களும் நடைபெற்றது. 
 
இந்நிலையில், ஆளுநரின் சார்பாக நியமனம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. நியமிக்கபட்ட எம்எல்ஏக்களாக பணியாற்ற அனுமதிக்கும்படி கூறப்பட்டிருந்தது. 
 
இதற்கு பதில் கடிதம் எழுதிய சபாநாயகர், சபாநாயகர் இருக்கும் போது அவர்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரையும் மீறி ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது. எனவே, இந்த பதவி பிராமணம் செல்லாது என கூறி அதனை நிராகரித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்