இந்திய விமானப்படையில் வீரர்களுக்கு தட்டுப்பாடு; விமானப்படை தளபதி குற்றச்சாட்டு
திங்கள், 19 ஜூன் 2017 (20:58 IST)
இந்திய விமான படையில் வீரர்கள் குறைப்பாட்டால் பல பிரச்சனைகளை சந்திப்பதாக விமானப்படை தளபதி மார்ஷல் பி.எஸ். தனோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இரண்டு எல்லைகளிலும் குறைந்தபட்சம் 42 வீரர்களாவது இருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பாதுகாப்பில் 32 வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் எப்போதும் சவாலான சூழ்நிலையில் செயல்பட வேண்டிய நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் ஏன் விமானப்படை பயன்படுத்தப்படவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அது அரசின் விருப்பம். எங்கள் படை எப்போதும் தயாராக இருக்கும் என்றார்.