நிர்பயா வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அளித்தார். அம்மனுவை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார் அதன் பின்பு அம்மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பபப்பட்டது. அதனை குடியரசு தலைவர் நிராகரித்ததால் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தற்போது தூக்கு தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் ”குற்றம் நடந்தபோது தான் சிறுவன் என்ற முறையீட்டை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்காததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.