ராஜ்யசபாவுக்கு செல்கிறார் ஸ்மிருதி இரானி.. அமைச்சர் பதவி கிடைக்குமா?

Mahendran

வெள்ளி, 14 ஜூன் 2024 (14:33 IST)
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி ராஜ்ய சபாவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து அமைச்சரானவர் ஸ்மிருதி இரானி. ஆனால் இந்த தேர்தலில் அதே தொகுதியில் அவர் தோல்வி அடைந்ததை எடுத்து அவரது ஆதரவாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். 
 
இந்த நிலையில் அவருடைய அரசியல் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்க இருப்பதாகவும் விரைவில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் அவர் போட்டியிட்டு ராஜ்யசபா எம்பி ஆவார் என்று கூறப்படுகிறது. 
 
அது மட்டும் இன்றி இன்னும் சில மாதங்களில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யும்போது ஸ்மிருதி இரானிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 
 
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களவையை கலக்கிய ஸ்மிருதி இரானி அடுத்த ஐந்து ஆண்டுகள் ராஜ்யசபாவையும் கலக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்