தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்தில் புதிய கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்திட்டுள்ளார் இது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கடந்த 8-ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது எனவும் அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் எனவும் கூறினார். இந்த புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கியதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான உர்ஜித் படேல் கையெழுத்து உள்ளது. இவர் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி தான் பொறுப்பேற்றார்.
எனவே புதிய ரூபாய் நோட்டு ஆறு மாதத்திற்கு முன்னரே அச்சடிக்கப்பட்டிருந்தால் அப்போதைய கவர்னர் ரகுராம் ராஜனின் கையெழுத்து தானே இருக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.