இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கர்நாடகா தலித் மற்றும் பழங்குடியின ஒப்பந்ததாரர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதலவர் சித்தரமையா, சமத்துவத்தை ஏற்படுத்த இட ஒதுக்கீடு ஒரு வழி என்றும், நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தரமான கல்வி, இயற்கை வளங்கள் கிடைக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் அவர், அரசியல் சாசனம் இல்லாமல் இருந்திருந்தால் தான் முதலமைச்சர் ஆகியிருக்கமுடியாது எனவும், மோடி பிரதமர் பதவியை நினைத்துகூட பாத்திருக்க முடியாது எனவும் கூறினார்.
இவ்வாறு சித்தராமையா கூறியது பாஜக-வைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள், அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.