அடுத்தடுத்த ராஜினாமா... காலியாகும் காங்கிரஸ் கூடாரம்!

திங்கள், 9 டிசம்பர் 2019 (16:32 IST)
இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 12 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்தது. 
 
இதன் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். இதனை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். பெரும்பான்மைக்கு 6 இடங்களே தேவைப்பட்ட நிலையில் பாஜக 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் 2 உடங்களில் முன்னிலை பெற்றது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 1 இடத்தில் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பை சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். இவரை தொடர்ந்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்யவுள்ளார் என தகவ்ல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்