நாளை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: எடியூரப்பா அரசு தப்புமா?

ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (19:12 IST)
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற 15 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனை அடுத்து நாளைய முடிவுக்கு பின்னரே எடியூரப்பா அரசு நீடிக்குமா என்பது தெரியவரும் 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 17 எம்எல்ஏக்கள் திடீரென காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனை அடுத்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது 
 
இதனை அடுத்து கட்சித்தாவல் சட்டத்தின்படி 17 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த 15 தொகுதிகளில் கடந்த ஐந்தாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன
 
பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டுமென்றால் அந்தக் கட்சி ஆறு தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலை உள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக 6 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளுமா? அல்லது போதுமான மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி கவிழுமா என்பது தெரியவரும் 
 
இதனை அடுத்து நாளைய வாக்கு எண்ணிக்கையின் முடிவை அறிய கர்நாடக மாநில மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்