டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.. முழு விவரங்கள்..!

Mahendran

திங்கள், 5 மே 2025 (18:06 IST)
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததும், இந்திய பங்கு சந்தையில் நிலவும்  வளர்ச்சியும் இன்று ரூபாயின் மதிப்பை உயர்த்தியுள்ளன.
 
அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது, இன்று  இந்திய ரூபாய் 24 காசுகள் உயர்ந்து ரூ.84.33 ஆக நிலைபெற்றது.
 
வங்கிகளுக்கிடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இன்று ரூபாய் ரூ.84.45 என்ற மதிப்பில் வர்த்தகம் துவங்கி, ஒருசமயம் ரூ.84.10 என்ற உயர் நிலைக்கும் சென்றது. பின்னர், குறைந்தபட்சமாக ரூ.84.47 ஐத் தொட்டு, இறுதியில் ரூ.84.33 என்ற நிலைக்கு வந்து முடிந்தது.
 
 இன்றைய சந்தை நிலவரம், உலக சந்தையின் தாக்கமும், இந்தியாவின் பொருளாதார நம்பிக்கையும் ரூபாயின் மதிப்பை நேர்மறையாக நகர்த்தியுள்ளன.
 
ரூபாய் மதிப்பு மட்டுமின்றி இந்திய பங்குச்சந்தையும் இன்று நன்கு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 294.85 புள்ளிகள் உயர்ந்து  80,796.84 என வர்த்தகம் முடிந்தது. அதேபோல் நிப்டி  114.45 புள்ளிகள் உயர்ந்து 24,461.15 என முடிவுக்கு வந்தது.


Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்