மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக்கொலை: கொல்கத்தாவை அடுத்து டெல்லியில் பயங்கரம்..!

Mahendran
வியாழன், 3 அக்டோபர் 2024 (11:25 IST)
டெல்லி மருத்துவமனையில் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், ஒரு மருத்துவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், டெல்லியில் மேலும் ஒரு மருத்துவர் சுட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் உள்ள நீமா மருத்துவமனைக்கு நேற்று இரவு, விபத்து ஏற்பட்டதாகக் கூறி இரண்டு பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக வந்தனர். அப்போது, அவர்கள் இருவரும், மருத்துவர் ஜாவேத்தை சந்திக்க வேண்டும் என்று கூறினர். 
 
மருத்துவ ஊழியர்கள் அவர்களை மருத்துவரிடம் அனுப்பி வைத்தனர். அங்கு நுழைந்தவுடன், இருவரும் துப்பாக்கியால் மருத்துவர் ஜாவேத்தை சுட்டுக் கொன்று தப்பி ஓடியதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். 
 
ஏற்கனவே கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு மருத்துவர் சுட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்