பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு: கலக்கத்தில் முதலீட்டாளர்கள்!

திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (09:29 IST)
கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்தது என்பதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமாக சென்செக்ஸ் இருந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென 700 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்த நிலையில் இன்றும் 400 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே 400 புள்ளிகள் சரிந்து 59,250 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 125 புள்ளிகள் சரிந்து 15,625 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
கடந்த சில வாரங்களாக நன்றாக உயர்ந்து கொண்டே வந்த பங்குச்சந்தை திடீரென தற்போது இரண்டு நாட்களாக வீழ்ச்சி அடைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்