மீண்டும் 1000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்: ரூ.20 லட்சம் கோடி நஷ்டம் என தகவல்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (10:49 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த வாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 62000 புள்ளிகள் என இருந்த சென்செக்ஸ் தற்போது 56 ஆயிரம் என சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களில் மட்டும் பங்குசந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு 20 லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் இறங்கி 56 ஆயிரத்து 850 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் இறங்கி சுமார் 17,000 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்