மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள் முதலீட்டாளர்களை கவரவில்லை என்றும் அதனால்தான் பங்குச்சந்தை குறைய காரணம் என்றும் முதலீட்டாளர்கள் இடையே கருத்து பகிரப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இன்றைய வர்த்தக நேர முடிவில் 1069 புள்ளிகள் தேசிய பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்தது குறியீட்டு எண் நிப்டி 311 புள்ளிகள் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
ஐடி துறை தவிர மற்ற அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் குறைந்துள்ளது என்பதும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் குறைந்து ரூ.75.91ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது