யுகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: பொதுமக்கள் ரயில் மறியலால் பரபரப்பு..!

Siva

புதன், 21 ஆகஸ்ட் 2024 (07:35 IST)
யுகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் திடீரென ரயில் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பதிலாப்பூர் என்ற பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படிக்கும் யுகேஜி பெண் குழந்தைகளுக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரை அடுத்து பள்ளி ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பெற்றோர்கள் ஒன்றாக சேர்ந்து திடீரென ரயில் மறியல் போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான்கு வயது குழந்தைகளுக்கு பாலியல் தொடுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் நபரை ஒரு மனிதராகவே கருதக்கூடாது என்றும் அந்த மனித மிருகத்தை உடனடியாக தூக்கில் இடவேண்டும் என்றும் போராட்டம் செய்த பொதுமக்கள் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து போராட்ட களத்திற்கு வந்த காவல்துறையினர் பள்ளியில் பணிபுரியும் ஊழியர் மீது கண்டிப்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனால் சில மணி நேரம் தானே பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்