அரியானாவின் சிர்சா மாவட்டத்தில் சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு, பயின்று வரும் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பேராசியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவின் சிர்சா மாவட்டத்தில் சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் மாணவிகள் அந்த பேராசியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், கல்லூரி மாணவிகளை அலுவலகத்திற்கு அழைத்து, பின்னர், குளியல் அறைக்கு அழைத்துச் சென்று ஆபாசமாக நடந்து கொள்வார் என்று கூறி, இவ்விவகாரத்தில் அவரை சஸ்பெண்ட் செய்து, விசாரணை நடத்த வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவிகள் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும், என மிரட்டுவார் என்று கூறியுள்ளனர்.
மேலும், இக்கடிதம் வெளியே தெரியாமல் இருக்க, எழுத்து மற்றும் பிராக்டிகல் தேர்வுகளில் மாணவிகளுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்க அப்பல்கலைக்கழக துணைவேந்தர் அதிக மதிப்பெண் வழங்க முன்வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.