மலையாள சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார்.! ஹேமா கமிட்டியின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்.!!

Senthil Velan

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (13:02 IST)
மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை சீலடப்பட்ட உறையில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பார்த்துக்கொண்டனர்.

இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பலர் இந்த அறிக்கையை வெளியிட கோரி வந்தனர். இதை விசாரித்த கேரள தகவல் உரிமை ஆணையம் ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து ஹேமா கமிட்டியின் அறிக்கை அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு மலையாள நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.   

இந்த அறிக்கை கேரளா மட்டுமின்றி இந்திய திரையுலகையே உலுக்கியது. அறிக்கை குறித்து விசாரணை நடத்துவதற்கு 7 உறுப்பினர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை கேரள அரசு கடந்த 25ஆம் தேதி அமைத்தது.   இந்த நிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை இன்று சீல் இடப்பட்ட உறையில் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


ALSO READ: வி.சி.க சார்பில் மது ஒழிப்பு மாநாடு.! அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு.! கூட்டணிக்கான அச்சாரமா.?

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து 4 ஆண்டுகளாகியும், நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அரசுக்கு, கேரள உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்