மேலும் 3 நடிகர்கள் மீது பாலியல் புகார்! அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் மலையாள சினிமா!

Prasanth Karthick
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (13:51 IST)

மலையாள சினிமாவில் ஹேமா அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகளும், நடிகர்களுக்கு எதிரான பாலியல் புகார்களை தெரிவித்து வருவது மலையாள சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித், நடிகர் சித்திக் உள்ளிட்டவர்கள் மீது பல நடிகைகள் பாலியல் புகார்களை அளித்தனர். அதை தொடர்ந்து கேரளா சினிமா அகாடமி பொறுப்பில் இருந்த ரஞ்சித், மலையாள நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் சித்திக் ஆகியோர் பதவி விலகினர். இதனால் மலையாள சினிமாவே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

 

இந்நிலையில் தற்போது மலையாள கவர்ச்சி நடிகை மினு என்பவர் 3 நடிகர்கள் மேல் பாலியல் புகார் அளித்துள்ளார். நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, இடவெலா பாபு, மணியன்பிள்ளை உள்ளிட்டவர்கள் மீது பாலியல் தொல்லை அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதில் மணியன்பிள்ளை தன் மீது எந்த தவறும் இல்லை என கூறியுள்ள நிலையில், மற்ற நடிகர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தொடர்ந்து மலையாள நடிகர்கள் மீது நடிகைகள், சினிமாவில் பணியாற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் புகார் அளித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்