இந்தியாவின் தலைநகரமான டெல்லி கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு காரணமாக பெரும் சிக்கலில் உள்ளது. குறிப்பாக தீபாவளி தொடங்கியுள்ள நேரத்தில், டெல்லியின் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக, டெல்லி மக்கள் தொண்டையடைப்பு, மூச்சுத் திணறல், கண்களில் எரிச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காற்றின் தரம் பூஜ்ஜியம் முதல் 50 வரை இருக்க வேண்டிய நிலையில், 264 என்பது மிகவும் மோசமான நிலை எனவும், டெல்லி அரசு உடனடியாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.