டெல்லி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற காலிஸ்தான் அமைப்பு! - வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை?

Prasanth Karthick

திங்கள், 21 அக்டோபர் 2024 (11:37 IST)

நேற்று டெல்லியில் சிஆர்பிஎப் பள்ளி அருகே வெடிக்குண்டு வெடித்த சம்பவத்தில் காலிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நேற்று டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளி மைதானம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் உயிர்சேதம் ஏதும் ஏற்படாவிட்டாலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்தன.

 

இந்த குண்டுவெடிப்பு விவகாரத்தில் திருப்பு முனையாக பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் டெலிகிராம் சேனல் ஒன்றில் டெல்லி குண்டுவெடிப்பு வீடியோ பகிரப்பட்டு காலிஸ்தான் அமைப்பு சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ALSO READ: நீங்க அமைச்சராகும்போது.. திருமா முதல்வர் ஆக கூடாதா? - எல்.முருகனை வெளுத்த சீமான்!
 

அதில் இந்திய ஏஜென்சியும், அதன் எஜமானர்களும் நமது குரலை நசுக்க கேடுகெட்ட ரவுடிகளுக்கு பணம் கொடுத்து ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு எவ்வளவு அருகில் நாம் இருக்கிறோம் என்பதையும், நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் அவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது என எச்சரிக்கும் தொனியில் செய்து விடுத்துள்ளதுடன், காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

 

இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. முன்னதாக காலிஸ்தான் அமைப்பு தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வைத்து கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசின் தூதரகம், பிஷ்னோய் கும்பல் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளதாக கனடா உளவுத்துறை தெரிவித்ததாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் பரபரப்பு எழுந்தது. அதன் தொடர் நிகழ்வாக தற்போது டெல்லி குண்டுவெடிப்பு சம்பவமும் இதனுடன் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்