பாஜகவின் விஜய் சங்கல்ப் பேரணி கோவாவின் பண்டா தொகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பேசிய மனோகர் பாரிக்கர், சிலர் கோவாவை கொள்ளையடிப்பதையே தங்கள் தொழிலாக வைத்திருக்கிறார்கள். 500, 1000 ரூபாய் நோட்டுள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த பிறகு பல அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்கள் ஆகி விட்டனர் என கூறினார்.
மேலும் கோவாவில் ஒரு பாலம் கட்ட மூன்று முறை அடிக்கல் நாட்டியும் அதனை நிறைவேற்றவில்லை முந்தைய அரசு. ஆனால், நான் முதலமைச்சராக பதவி ஏற்றதும், அதை ஆறு மாதங்களில் கட்டி முடிப்பேன் என அறிவித்தேன். ஆனால் மறுநாள் சிலர் என்னை சந்தித்து நரபலி கொடுக்காமல் அந்த வேலை முழுமையடையாது என்றார்கள். அது தவறு வேண்டுமானால் கோழியை பலி கொடுக்கலாம் என நான் அவர்களிடம் சொன்னேன் எனவும் மனோகர் பாரிக்கர் கூறினார்.