ஃபிரிட்ஜுக்குள் வைத்து பிணத்தை கடத்திய வேலைக்காரன்: டெல்லியில் பகீர்

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (17:18 IST)
டெல்லியில் வேலையாள், பணிபுரியும் வீட்டின் ஓனரை கொலை செய்து குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து கடத்தி சென்றத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
91 வயதான கிருஷ்ணன் கோஷ்லா என்பவர் தனது மனைவியுடன் டெல்லியில் வசித்து வந்தார். இவர்களது வீட்டில் ஓராண்டுக்கும் மேலாக கிஷன் என்பவர் பணியாற்றி வந்துள்ளான். கிஷன் பீகாரை சேர்ந்தவர். 
 
இந்நிலையில், கிருஷ்ணன் காணாமல் போனதாக அவருடைய குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை துவங்கியுள்ளனர். போலீஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் கிஷன் கிருஷ்ணனை கொலை செய்தது தெரியவந்தது. 
ஆம், கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவிக்கும் மயக்க மருந்து கலந்து கொடுத்து, இருவரும் மயக்கமானதும் 5 பேரை அழைத்து வந்து கிருஷ்னனை தாக்கியுள்ளான். இதில் கிருஷ்ணன் உயிரிழந்தார். பின்னர் கிருஷ்ணனின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்து கடத்தி சென்றான். 
 
டெக்கிரி என்ற பகுதியிலிருந்து குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணனின் உடலை போலீஸார் மீட்டனர். எதற்காக கிருஷ்ணன் கொலை செய்யப்பட்டார் என தெரியாத நிலையில் போலீஸாரின் விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்