தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா அட்டாக் செய்யும்: சீரம் !

Webdunia
சனி, 16 ஜனவரி 2021 (11:29 IST)
கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பிறகும் கூட கொரோனா வர வாய்ப்பிருப்பதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. தடுப்பூசி குறித்த விவரங்களை பெற 1075 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். 
 
இதுவரை நாடெங்கும் பல்வேறு நகரங்களில் உள்ள 3,006 மையங்களுக்கு ஒரு கோடியே 65 லட்சம் தடுப்பூசிகள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் தினசரி 100 பேருக்கு ஊசி போடப்படும் என்றும், பின்னர் இவை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் 28 நாட்கள் இடைவெளியில் அவசரகால சிகிச்சைக்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இரண்டு மருந்தையும் சேர்த்து பயன்படுத்த கூடாது எனவும் தனித்தனியே பயன்படுத்தினால் மட்டுமே பலன் தரும் எறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பிறகும் கூட கொரோனா வர வாய்ப்பிருப்பதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அனைத்து தடுப்பூசிகளுக்கு இருக்கும் பொதுவான இலக்கணம் என்றும் 28 நாட்கள் இடைவெளியில் இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ்கள் போட்டுக்கொண்டால் இதன் பலன் சிறப்பாக இருக்கும் என சீரம் நிறுவனம் விஞ்ஞானிகள் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்