இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பதில் மனு தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இதை அடுத்து அமலாக்கத்துறை தனது பதில் மனுவை தாக்கல் செய்தது.
அந்த மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகும், எம்எல்ஏ பொறுப்பில் உள்ளதால் வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது.