இன்று ஆண்டு பட்ஜெட் தாக்கல்; ஏற்றத்துடன் தொடங்கிய பங்குசந்தை!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (09:47 IST)
இன்று இந்திய ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பங்குசந்தை ஏற்றத்துடன் வணிகத்தை தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக மும்பை பங்குசந்தை புள்ளிகள் கடும் சரிவை சந்தித்தது. 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் இருந்த சென்செக்ஸ் வேகமாக சரிந்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே பங்குசந்தை வணிகம் சுமாரான அளவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று மத்திய அரசின் 2022-23க்கான ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாக உள்ளன. இதில் தொழில்நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று பங்குசந்தை புள்ளிகள் ஆரம்பமே உயரத்தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் புள்ளிகள் 571 உயர்ந்து 58,585 ஆகவும், நிப்டி 154 புள்ளிகள் உயர்ந்து 17,494 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்