திட்டமிட்டபடி வரும் மே 21 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு !

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (19:36 IST)
2022 ஆம் ஆண்டிற்கான முது நிலை படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேர முதுநிலை நீட் தேர்வு வரும் மே 21 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கபட்ட  நிலையில், இந்த தேர்வை ஒத்தி வைக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 

பின்னர், இக்கோரிக்கையை ஏற்று ஜூலை 9 ஆம் தேதிக்கு நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.

இதன் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிக்கை தகவல் மையம் ஒரு ஆய்வு செய்ததில், முதுநிலை நீட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை ; வரும் 21 ஆம் தேதி கட்டாயம் நீட் தேர்வு நடைபெறும் என தெரிவித்தது.

தற்போது கலந்தாய்வு நடந்து கொண்டிருப்பதால் முது நிலை தேர்வை ஒத்திவைக்கும்படி இள நிலை மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், 2021 ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்காக அனைத்துக் கலந்தாய்வ்ம், 2022 ஆம் ஆண்டு முது நிலை நீட் தேர்வும் ஒரே நேரத்தில் நடப்பதால் குழப்பம் ஏற்படும் என்பதால் மே 21 ஆம் தேதி நடைபெறவுள்ள முது நிலை நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. அதில், முது நிலை தேர்வை தள்ளிவைத்தால் உள்ளுறை மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் என  மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இள நிலை மருத்துவர்கள் தரப்பில் தேர்வை தள்ளிவைக்க வேண்டுமென பிரதமரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதுகுறித்து நீதிபதிகள், தேர்வை ஒத்திவைப்பதால் குழப்பம் மற்றும் நிச்சமற்ற தன்மை ஏற்படும் எனவும், தேர்வுக்குப் பதிவு செய்துள்ள மாணவர்களை இது பாதிக்கும், இதில் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென கூறுவோர் மற்றும் தேர்வு நடத்த வேண்டுமமேனக் கூறும் இரண்டு வகை மாணவர்கள் உள்ளனர்.

தேர்வை தள்ளிவைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடம் மருத்துவச் சேவைகளும் பாதிக்கப்படும் என்று கூறி  தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனவே திட்டமிட்டபடி வரும் 21 ஆம் தேதி முது நிலை நீட் தேர்வு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்