பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூட்டர்- அசாம் அரசின் அமைச்சரவையில் ஒப்புதல்

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (20:55 IST)
அசாம் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பில் 75  சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் 60 சதவீதம்  பெறும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று  மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 12 ஆம் வகுப்பில் 75 விழுக்காடுக்கும் அதிகமான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மற்றும் 60 விழுக்காடு மதிப்பெண் எடுக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதவிர, அம்மா நிலத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மணவர்கள் 3 லட்சத்து 78 அயிரம் பேருக்கு சைக்கிள் அளிக்கவும்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணாவர்களின் சைக்கிள் வழங்கும் திட்டத்திற்காக  ரூ.167 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அசாம் விவசாய பல்கலைக்கழகத்தில் ஓபிசி மற்றும் எம்ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு 15 விழுக்காட்டில் இருந்து 27 விழுக்காடாக உயர்த்தி அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்