பள்ளி மாணவியை பெயிலாக்கி விடுவேன் என மிரட்டி பலாத்காரம் செய்த ஆசிரியர்!

Webdunia
சனி, 12 நவம்பர் 2016 (10:11 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவி ஒருவரை ஆசிரியர் ஒருவர் பெயிலாக்கி விடுவேன் என மிரட்டி இரண்டுமுறை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மிர்சாபூர் அருகில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் விஷ்ஹெந்தர குமார் என்பவர். இவர் அந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
 
தன்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் இல்லையெனில் உன்னை பெயிலாக்கி விடுவேன் என அந்த மாணவியை இரண்டு முறை பலாத்காரம் செய்துள்ளார் அந்த ஆசிரியர். இதனையடுத்து இந்த விவகாரம் அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.
 
ஆனால் காவல்துறை இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரையும் கைது செய்யாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அதிகாரி தலையிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.
அடுத்த கட்டுரையில்