இந்த நிலையில் ஆண்கள் ராணுவத்தில் சேரவும், தேர்தலில் வாக்களிக்கவும் வயது 18 என்ற நிலை இருக்கும் போது, ஆண்களின் திருமண வயது மட்டும் 21ஆக உள்ளது, அதுவும் ஏன் 18 ஆக் இருக்க கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஆனால் அதே நேரத்தில் 18 வயது ஆண் ஒருவர் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தால் அதனை விசாரிக்க தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.