தேர்தல் பத்திரங்கள் தரவுகளை வெளியிட தயார்: நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி..!

Mahendran

செவ்வாய், 12 மார்ச் 2024 (13:05 IST)
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிட தயார் என எஸ்பிஐ வங்கி சற்று முன் தெரிவித்துள்ளது. 
 
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் இன்றுக்குள் முழு விவரங்களை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் சற்றுமுன் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும்படி அனைத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளையும் வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. 
 
இந்த தரவுகள் வெளியானால் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது என்பது குறித்த முழு விவரமும் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முன்னதாக தேர்தல் பத்திர விவரங்களை வழங்க கால நீடிப்பு கூறிய எஸ்பிஐ  வங்கியின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அனைத்து விவரங்களையும் இன்று மதியம் 12 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்