இப்போ என்ன செய்வீங்க? ஆப்பு வைத்த சரஹா

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (15:14 IST)
சரஹா செயலியில் பிரச்சனைக்குரிய தகவல்களை அனுப்பும்பட்சத்தில், அனுப்பியவரின் தகவல்கள் வெளியிடப்படும் என சரஹா எச்சரிக்கை விடுத்துள்ளது.


 

 
சரஹா எனும் செயலி கடந்த சில நாட்களாக இந்தியாவில் பிரபலமாகியுள்ளது. மொட்டை கடிதாசி போன்று தகவல்களை சரஹா மூலம் அனுப்ப முடியும். ஆனால் அனுப்பியவர் யார் என்பதை பார்க்க முடியாது. இதனால் தற்போது இந்த சரஹா ஃபேஸ்புக்கில் செம ஹாட் டிரண்ட்.
 
இந்நிலையில் சரஹா செலயலியை உருவாக்கிய சைன் அலாப்தின் அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
சரஹா செயலி நமக்கு அறிமுகமானவர்களிடம் உண்மையை தெரிவித்து, அவர்களிடம் ஆக்கப்பூர்வமான தகவல்களை தெரிவிக்க உருவாக்கினோம். எல்லாவற்றையும் நேரடியாக மற்றவர்களிடம் தெரிவிக்க முடியாது என்பதால் மெசேஜ் அனுப்பியது யார் என்ற தகவல்களை மறைத்தோம். இதனை மக்கள் சரியான நோக்கத்தில் பயன்படுத்துவதாய் தெரியவில்லை.
 
சரஹா செயலியை பயன்படுத்தி மற்றவர்களுக்கு அச்சுறுத்தல், மிரட்டல் போன்றவை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை சரஹா பயனர்கள் செயலியில் பதிவிட்டு வருகின்றனர். சரஹா செயலி மிகுந்த கடுமையான விதிமுறைகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
சரஹா விதிமுறைகளை மீறும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஒருபோதும் ரகசியமாக வைக்கப்படாது என்றார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்