மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. நானா பாடேகர், அலோக் நாத், விகாஸ் பால், சஜித் கான், அனு மாலிக் உள்ளிட்ட பல ஹாலிட் பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
பாலிவுட்டில் பலர் மீது புகார்கள் எழுந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தான் நிற்பதாக அமிதாப்பச்சன் கூறியிருந்தார். ஆனால், இது பெரிய பொய். சமூக ஆர்வலர் போல் காட்டிக்கொள்ளும் உங்கள் முகத்திரை விரைவில் கிழியும். உங்களை பற்றிய உண்மைகள் விரைவில் வெளிவரும். அப்போது கடிப்பதற்கு நகம் கூட இல்லாமல், விரலை நீங்கள் கடித்துக்கொள்வீர்கள்” என டிவிட் செய்துள்ளார்.
இதையடுத்து, இவருக்கு பல நடிகைகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், அமிதாப்பச்சனும் அப்படித்தான் என பல பெண்கள் டிவிட்டரில் தைரியமாக கூற முன்வந்துள்ளனர்.