மெட்டா நிறுவனத்தின் தலைவராக இந்திய பெண் நியமனம்!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (16:24 IST)
மெட்டா நிறுவனத்தின் தலைவராக இந்திய பெண் நியமனம்!
மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன் பதவி விலகிய நிலையில் அவருக்கு பதிலாக புதிய நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகீய பல முன்னணி நிறுவனங்கள் இணைந்தது மெட்டா. இந்நிறுவனத்தின் இந்திய தலைவராக இருந்த அஜீத் மோகன் திடீரென தனது பதவியில் இருந்து விலகினார் 
 
இந்த நிலையில் நிறுவனத்தின் மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் மோகன் செய்த அனைத்து பணிகளைஅனைத்தையும்  இவர் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சந்தியா தேவநாதன் தலைமையில் இந்தியாவில் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் புதிய எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பயனாளிகள் அதிகரிக்க அவர் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த தகவல் மெட்டா நிறுவனத்தின் அதிகாரபூர்வமான செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்