சமாஜ்வாதி கட்சி தலைவர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து....பரவலாகும் வீடியோ

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (16:02 IST)
உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவர்  தேவேந்திர சிங் யாதவ் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதி விபத்துக்குள்ளானது.

உத்தரபிரதேச  மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்டத் தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ். இவர் நேற்று இரவு தன் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குக் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது,  கார் மீது வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

கார் மீது லாரி மோதிய வேகத்தில் சுமார் 500 மீ தூரம் வரை இழுத்துச் சென்றது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த தேந்திர சிங்கை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்