ராஜினாமா பண்ணிட்டு போங்க: சச்சின் மற்றும் ரேகாவிற்கு ராஜ்யசபாவில் அவமானம்!!

வெள்ளி, 31 மார்ச் 2017 (12:14 IST)
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரான சச்சினும், நடிகை ரேகாவும் மாநிலங்களவைக்கு வராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


 
 
ராஜ்யசபாவுக்கு தற்போது 245 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுள் 233 உறுப்பினர்கள் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
 
மீதமுள்ள 12 உறுப்பினர்கள் ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படுவர். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாகும்.
 
அதன்படி சச்சினும், ரேகாவும் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ஒருநாள் கூட அவைக்கு வரவில்லை. இது குறித்து சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கேள்வி எழுப்பினார்.
 
அப்போது, சச்சினையும், ரேகாவையும் நான் அவையில் பார்த்ததில்லை. அவைக்கு வராததால் மக்கள் பணியாற்ற அவர்களுக்கு விருப்பம் இல்லையெனில், அவர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்