திருமண வீட்டார் மட்டும் ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றத்திற்கான தொகை அளவை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒருவர் அவரது வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை மட்டும்தான் எடுக்க முடியும்.
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் திருமண வீட்டார்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமண வீட்டார் கல்யாண செலவுகளுக்கு வங்கியில் இருந்து 2.5 லட்சம் பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் அதுக்கு சில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் கீழே:-
# நவம்பர் 8 ஆம் தேதிக்கு முன் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மட்டுமே எடுக்க முடியும்
# டிசம்பர் 30 ஆம் தேதி மற்றும் அதற்கு முன் நடக்கும் திருமணத்துக்கு மட்டுமே எடுக்க முடியும்
# திருமண அழைப்பிதழ் மண்டப செலவு ரசீது ஆகியவற்றை அளிக்க வேண்டும்
# அதில் யார்யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை விவரிக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு வங்கி கணக்கு இல்லாத படசத்தில் மட்டுமே ரொக்க தொகை வழங்க முடியும்.
# திருமண வீட்டார் அல்லது திருமணம் செய்யும் நபர் ஒருவருக்கு மட்டுமே 2.50 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு விதிமுறைகள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.