மாடுகளுக்கு இருக்கும் பாதுகாப்பு மனிதர்களுக்கு இல்லையா? ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சை பதில்!

புதன், 25 ஜூலை 2018 (16:22 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில், இரு முஸ்லிம் இளைஞர்கள் பசுமாடுகளை ஏற்றுச்சென்ற போது பசு குண்டர்கள் அவர்களை கடுமையாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 
 
எனவே, பசு குண்டர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அப்பாவி மக்களை தாக்க கூடாது எனவும், அவ்வாறு செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
இருப்பினும் இவ்வாறு சம்பவங்கள் நடப்பதால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுப்பட்டு மாடுகளுக்கு இருக்கும் பாதுகாப்பு மனிதர்களுக்கு இல்லையான என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர்.
 
இதற்கு ஆர்ஏஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார், மக்கள் பசுமாட்டிறைச்சியை உண்பதை நிறுத்தினால், ஏன் இந்த குழப்பம் வரப்போகிறது? மேலும், பசுமாட்டிறைச்சியை சாப்பிடுவதை நிறுத்தினால் மனிதர்கள் கொல்லப்படுவதும் நிறுத்தப்படும் என பதிலளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்