கர்நாடகாவில் பெரிய அளவில் சுரங்க ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி குமாரசாமி குற்றம் சாட்டி இருக்கிறார். சித்தராமையா முதலமைச்சர் ஆன பின்பு இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்க பல புதிய இரும்பு தாது சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி 30 லட்சம் டன் இரும்பு தாது மட்டும் ஒரு ஆண்டில் எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அதைவிட இருமடங்கு இரும்பு தாதுகளை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கிறார்கள். ஊழல் செய்ய வசதியாக தங்களுக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளை சுரங்க துறைகளில் நியமித் திருக்கிறார்கள். ஊழலுக்கு உடன்படாத அதிகாரிகளை மாற்றி இருக்கிறார்கள். இந்த முறைகேட்டில் சுரங்கதுறை அமைச்சர் வினைய்குல்கர்னிக்கு முக்கிய பங்குள்ளது.