உயிறுடன் இருந்தவருக்கு பிரேத பரிசோதனை: கர்நாடகாவில் சர்ச்சை!!

திங்கள், 8 ஜனவரி 2018 (18:50 IST)
கர்நாடகாவில் சாலை விபத்து ஒன்றில் சிக்கிய நபர் உயிருடன் இருக்கும் போதே பிரேத பரிசோதனை செய்து கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிரவீன் மூலே என்பவர் சாலை விபத்தில் சிக்கி கர்நாடக மருத்துவ அறிவியல் மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்த மருத்துவமனை அதிகாரிகள் பிரவீன் இறந்து விட்டதாக கூறி பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடலை அனுப்பியுள்ளனர்.
 
ஆனால், பிரவீன் உறவினர்கள் வந்து பார்த்த போது, அவரது கை கால் அசைந்துள்ளது இது குறித்து உறவினர்கள் மருத்துவரிடம் கூறியுள்ளனர். ஆனால், 7 மணிநேரம் வரை மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் பிரவீன் வைக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார்.
 
ஆனால், மருத்துவமனை தரப்போ பிரவீன் உறவினர்களின் குற்றச்சாட்டினை மறுத்துள்ளனர். மேலும், பிரவீன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபொழுதே அவர் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்