அந்த பஸ்சில் பயணம் பயணி ஒருவர் 15 காசு கொடுத்து டிக்கெட் வாங்கினார். அந்த இடத்துக்கு செல்ல 10 காசுதான் கட்டணமாகும். ஆனால், கண்டக்டர் ரன்வீர்சிங் 15 காசு வசூலித்து 10 காசுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்து இருந்தார். மீதி 5 காசை தான் வைத்துக் கொண்டார். இதை பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர்.
ஆனால், டெல்லி அரசு போக்குவரத்து கழகம் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தது. இதன் இடைக்கால தீர்ப்பில் ரன்வீர்சிங்குக்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டிய ரூ.6 லட்சம் பணிக்கொடை மற்றும் பல்வேறு பயன்பாடுகளை வழங்கும்படி கோர்ட்டு கூறியது.
இந்த வழக்கு 41 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தற்போது ரன்வீர் சிங்குக்கு 73 வயது ஆகிறது. இந்த வழக்குக்காக ரன்வீர்சிங்கும், அரசு போக்குவரத்து கழகமும் சேர்ந்து ரூ. 5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். ஆனாலும் 5 காசு பிரச்சினைக்கு இன்னும் முடிவு ஏற்படவில்லை.