அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி திட்டம்! - முதல்வர் அறிவிப்பு!

Prasanth Karthick

புதன், 12 மார்ச் 2025 (11:45 IST)

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் ரெங்கசாமி அறிவித்துள்ளார்.

 

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சமீபமாக காலை உணவு திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் அடுத்த கட்டமாக மாலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அம்மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்துள்ளார்.

 

புதுச்சேரி யூனியன் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முதல்வர் ரெங்கசாமி புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி, விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 

 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி திட்டம். வாரத்தில் மூன்று நாட்கள் வழங்கப்பட்டு வந்த முட்டை தினம்தோறும் வழங்கப்படும். 

 

6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவ - மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை

 

மீனவ சமுதாய பெண்கள் உயிரிழந்தால் ஈம சடங்குகளுக்கு வழங்கப்படும் ரூ.15 ஆயிரம் நிதி ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

 

மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்

 

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.

 

புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும்.

 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்