வங்கி போல கட்டுக்கட்டாக ரூ.220 கோடி ரொக்கம் வீட்டில் வைத்திருந்த காங்கிரஸ் எம்பி.. அதிர்ச்சி தகவல்..!

சனி, 9 டிசம்பர் 2023 (11:00 IST)
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்பி ஒருவர் தான் அது வீட்டில் வங்கியில் இருப்பது போல கட்டு கட்டாக 220 கோடி ரூபாய் ரொக்கமாக பணம் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வருமான வரித்துறை கடந்த சில நாட்களாக மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்பட ஒரு சில மாநிலங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் ஒடிசாவில் உள்ள ஜார்கண்ட் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகு என்பவரது வீட்டில் இருந்து மட்டும் 220 கோடி ரூபாய் ரொக்க பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

இதுவரை 220 கோடி ரூபாய் எண்ணப்பட்டுள்ளதாகவும் இன்னும் கரன்சி நோட்டுகள் இருப்பதாகவும் அதற்காக கூடுதல் எந்திரங்களை வரவழைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே ஒரு எம்பி இடம் இருந்து ஊழல் மூலம் கொள்ளை அடிக்க பட்ட  பணம் இது என்று பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களின் நேர்மை பற்றிய பேச்சுக்களை கேட்பதற்கு முன் மக்கள் கட்டு கட்டாக அடுக்கி வைத்திருக்கும் பணத்தை பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்