முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்: ஏன் தெரியுமா?

சனி, 2 ஜனவரி 2021 (08:00 IST)
உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்தவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த சில நாட்களாக இவருடைய நிறுவனத்தின் பங்குகளின் விலை குறைந்து வருவதால் தற்போது முதல் 10 இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இவர்தான் என்பதும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென முகேஷ் அம்பானிக்கு ரூபாய் 15 கோடி அபராதம் விதித்து இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 2007ஆம் ஆண்டு முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டதாக ரிலையன்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூபாய் 25 கோடியும், முகேஷ் அம்பானிக்கு ரூபாய் 15 கோடியும் அபராதம் விதித்துள்ளது. இந்திய பங்குசந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்