சாலையில் சாணம் போட்ட எருமைக்கு 10 ஆயிரம் அபராதம்! – மத்திய பிரதேசத்தில் விசித்திர சம்பவம்!

செவ்வாய், 29 டிசம்பர் 2020 (09:21 IST)
மத்திய பிரதேசத்தில் சாலையில் எருமை சாணம் போட்டதால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல நகரங்களில் மாடுகள் வளர்ப்பது பெரும் சிக்கலான விஷயமாக மாறியுள்ளது. மாடுகளை கட்டி வைக்க இடம் பற்றாக்குறை போன்றவற்றால் பலர் மாடுகளை சாலைகளிலேயே விட்டுவிடுகின்றனர். மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகளை பராமரிக்க அரசு பல்வேறு முயற்சிகளையும், மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாநகராட்சி பகுதியின் பிரதான சாலையில் மாடுகள் சில சாணம் போட்டுள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்