கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ய ரோபோ டிராலி! அசத்தும் மாநகராட்சி

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (07:22 IST)
கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ டிராலி ஒன்றை மும்பை மாநகராட்சி வடிவமைத்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவர்களிடம் இருந்து தொற்றைப் பெற அதிக சாத்தியமுள்ளது. இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நோயாளிகளுக்கும் உணவளிக்கவும், கழிவுப் பொருட்களை சேகரிக்கவும் ரோபோ டிராலி ஒன்றை மும்பை மாநகராட்சி வடிவமைத்துள்ளது.

இதன் மூலம் மருத்துவர்கள் மற்றும் செவ்லியர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பையிலுள்ள பொடார் மருத்துவமனையில் இந்த டிராலி நேற்று முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்